தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

செப். 11-இல் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தஞ்சாவூரில் மாவட்ட அளவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் செப். 11-ம் தேதி நடைபெறவுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தஞ்சாவூரில் மாவட்ட அளவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் செப். 11-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பளியில் செப். 11-ம் தேதி மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.  
ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம், ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து 3 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். போட்டிக்கான தலைப்பு, போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும். 
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 7,000- ம், மூன்றாம் பரிசாக ரூ. 5,000-ம் வழங்கப்படும். முதல் பரிசு பெறும் மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். 
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி முதல்வரின் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும். 
மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.