
கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 250 குவிண்டால் எடையுள்ள பருத்தி மூட்டைகள் புதன்கிழமை மறைமுக ஏலமிடப்பட்டது.
முன்னதாக, முத்தூர், அகராத்தூர், வேப்பத்தூர், திருவிடைமருதூர், கடலங்குடி, கடம்பங்குடி, கருமாத்தூர், அசூர், ஆதனூர் மற்றும் உமையாள்புரத்தை சேர்ந்த விவசாயிகள் 250 குவிண்டால் எடையுள்ள பருத்தியை கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்தனர்.
விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை சேலம், கும்பகோணம், செம்பனார்கோவில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த பருத்தி வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, ஏலமெடுத்தனர்.
இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக 5,793 ரூபாயும், சராசரி விலையாக 5,369 ரூபாயும், குறைந்தபட்ச விலையாக 4,689 ரூபாயும் விலை முடிவானது.
விவசாயிகள் கொண்டு வந்த 250 குவிண்டால் எடையுள்ள பருத்தி மூட்டைகள் ஏலத்தில் விற்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





