
கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் என்றழைக்கப்படும் சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணைக் கோயிலாக திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் வாணி - கமலாம்பிகை சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு கடந்த 5ஆம் தேதி விநாயக சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து காலை, மாலை இருவேளைகளும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை காலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, வாணி, கமலாம்பிகை சமேத சுவேத விநாயகர் திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டு, மங்கள வாத்தியங்கள், வாண வேடிக்கைகள் முழங்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். தேரானது நகரின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.
தொடர்ந்து, மாலையில் மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதியுலா நடைபெற்றது. செப். 14 ஆம் தேதி காலை அரசலாற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






