
வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களைத் தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். ஏழாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையான 21 மாத கால ஊதியத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். தமிழக அரசால் அரசுப் பணிகளில் சீர்திருத்தம் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்வதற்கு முன்னாள் தலைமைச் செயலர் ஆதிசேஷய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டும் என அரசுப் பணியாளர் சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் அக்குழுவுக்கு மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு செய்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் ஆர். தங்க பிரபாகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் என். வெங்கடாசலம், ஜி. சக்ரவர்த்தி, பொருளாளர் எம். அய்யம்பெருமாள், செயலர் தரும. கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




