விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பாலக்கரையிலுள்ள விஸ்வரூப விநாயகருக்கு கஜ, கோ மற்றும் அஸ்வ பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் பாலக்கரையில் விஸ்வரூப விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு விஸ்வரூப விநாயகருக்கு கஜ (யானை), கோ (பசு) மற்றும் அஸ்வத்தை (குதிரை) அழைத்து வந்து புதன்கிழமை சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாலா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் பங்கேற்று, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் கணேசன், தொழிலதிபர் நாராயணன்பாலாஜி, இந்து மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





