பட்டுக்கோ ட் டை அருகே தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன், அண்ணி கைது செய்யப்பட்டனர்.
பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய நகர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்தியாகு மகன்கள் அருளானந்தம் (42), ஆரோக்கியசாமி (40). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இருவருக்கும் இடையே வீட்டு மனைகளை பாகம் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு வாசலில் நின்ற ஆரோக்கியசாமியை அந்த வழியாகச் சென்ற அவர் அண்ணன் அருளானந்தம், அவரது மனைவி விக்டோரியா மேரி (35) ஆகியோர் ஜாடையாக ஆபாச வார்த்தைகளால் திட்டிப் பேசினராம். இதை ஆரோக்கியசாமி தட்டிக் கேட்டாராம். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அருளானந்தம், விக்டோரியா மேரி ஆகிய இருவரும் அங்கிருந்த கட்டையை எடுத்து வந்து ஆரோக்கியசாமி தலையில் சரமாரியாக தாக்கினார்களாம். இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கியசாமி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் கொலைவழக்குப் பதிந்து அருளானந்தம், அவர் மனைவி விக்டோரியா மேரி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!

பிரதமரின் 'அனைவருக்குமான வளர்ச்சி' வழிகாட்டும் கொள்கையாகத் திகழ்கிறது: மே.வ. முதல்வர்

ஆம்பூர் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி

ஒரு வாக்கினால் தோல்வி: பெரியகருப்பன் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
