ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை காவல் சரகம், பூண்டி கிராமம்,  மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தில்லையம்மாள்

Updated On :13 பிப்ரவரி 2019, 9:31 am IST

பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை காவல் சரகம், பூண்டி கிராமம்,  மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தில்லையம்மாள் (61). இவர் டிசம்பர் 25ஆம் தேதி பிற்பகல் வடவாற்றுக்கு குளிக்க சென்றபோது மாயமானார். 
புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப். 12) வடவாற்றில் சேகர் என்பவர் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தாராம். மீன்வலை ஆற்றின் நடுத்திட்டில் வளர்ந்திருந்த நாணல் புதரில் சிக்கியதால் அங்கு சென்ற சேகர்  வலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டாராம்.  அப்போது,  நாணலில் சிக்கி அழுகி எலும்புக் கூடான சடலம் கிடப்பதை பார்த்த சேகர்  இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.   அங்கு சென்ற போலீஸார், எலும்புகூடான அந்த சடலத்தை மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தண்ணீரிலிருந்து  மீட்கப்பட்டது தில்லையம்மாளின் சடலம் என்பது தெரிய வந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.