அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

நிபந்தனையின்றி நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, உள்ளூர் விவசாயிகளின்

Updated On :23 ஜனவரி 2019, 7:54 am IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, உள்ளூர் விவசாயிகளின் நெல்லை  நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது: காவிரி டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, நெல்லை கொள்முதல் செய்து வருவது கடந்த கால வழக்கம். தற்போது சில இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
அந்த கொள்முதல் நிலையங்களிலும் பணியாளர்கள் மற்றும் சாக்கு, சணல் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் பணி முறையாக நடைபெறவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணி முறையாகவும், சரியாகவும் நடக்காததால் உற்பத்தி செய்த நெல்லை உள்ளூர் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள், உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம்,  தூசி,  கருக்காய் உள்ளது போன்ற பல காரணங்களைக் கூறி கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனர்,
பிற மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளின் நெல்லையும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நெல்லையும் எவ்வித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்து வருகின்றனர்.  இதனால், உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாமல், குறைந்த விலைக்கு வெளி சந்தையில் வியாபாரிகளிடம் விற்கின்றனர். சம்பா சாகுபடி செய்ய காவிரியில் போதிய தண்ணீரைத் தமிழக அரசுப் பெற்றுத்தர முடியாத நிலையில், பல்வேறு தடைகளைத் தாண்டி காவிரி பாசனப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்துள்ள சம்பா நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.