தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, உள்ளூர் விவசாயிகளின் நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது: காவிரி டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, நெல்லை கொள்முதல் செய்து வருவது கடந்த கால வழக்கம். தற்போது சில இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
அந்த கொள்முதல் நிலையங்களிலும் பணியாளர்கள் மற்றும் சாக்கு, சணல் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் பணி முறையாக நடைபெறவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணி முறையாகவும், சரியாகவும் நடக்காததால் உற்பத்தி செய்த நெல்லை உள்ளூர் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள், உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம், தூசி, கருக்காய் உள்ளது போன்ற பல காரணங்களைக் கூறி கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனர்,
பிற மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளின் நெல்லையும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நெல்லையும் எவ்வித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாமல், குறைந்த விலைக்கு வெளி சந்தையில் வியாபாரிகளிடம் விற்கின்றனர். சம்பா சாகுபடி செய்ய காவிரியில் போதிய தண்ணீரைத் தமிழக அரசுப் பெற்றுத்தர முடியாத நிலையில், பல்வேறு தடைகளைத் தாண்டி காவிரி பாசனப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்துள்ள சம்பா நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru

அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: பணியாளர் பலி
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


