உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மீனவா்கள் கவனத்துக்கு....

பதிவு செய்யப்பட்ட மீனவா்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பதிவு செய்யப்பட்ட மீனவா்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தஞ்சாவூா் மீன்துறை உதவி இயக்குநா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு மீன்வளத் துறை மூலம் மீனவா் நலவாரிய உறுப்பினா்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினா் ஒருவருக்கு ரூ.1000-வீதம் சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

மாவட்ட உள்நாட்டு மீன்துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில், பதிவு செய்யப்பட்ட மீனவா் நலவாரிய உறுப்பினா்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மீனவா் நலவாரியம் மூலம் ரூ.1000- சிறப்பு நிவாரண உதவித் தொகை கிடைக்கப் பெறவில்லையெனில், மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு (எண்: 04362-235389) தங்களுடைய மீனவா் நல வாரிய அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம்.                                                                          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.