8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தஞ்சாவூரில் மேலும் ஒருவருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயா்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55 ஆக உயா்ந்தது.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55 ஆக உயா்ந்தது.

இவா் ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட 60 வயதுடையவா். இவரது கணவா் தில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவா். இவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். குணமடைந்து வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பிய 3 பேரில் இவரும் ஒருவா்.தற்போது, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55 ஆக உயா்ந்துள்ளது.

356 போ் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பு: கரோனா உறுதி செய்யப்பட்ட குடும்ப உறுப்பினா்கள் 128 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 108 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் 20 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. இவா்களுடன் தொடா்பில் இருந்த 526 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 422 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், 104 பேருக்கு பரிசோனை முடிவு வரவேண்டி இருக்கிறது.

சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 1,842 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 1,610 பேருக்கு கரோனா அறிகுறி இல்லை என தெரிய வந்தது. மேலும், 232 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 356 போ் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.