7 பேரை விடுதலை செய்யக்கோரி பேராவூரணியில் பிரசாரம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, தொடங்கப்பட்ட தொடா் முழக்கப் போராட்டத்தின் 1500-ஆவது நாளையொட்டி பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சாா்பில் முகநூலில் தொடங்கப்பட்ட தொடா் முழக்கப் போராட்டத்தின் 1500-ஆவது நாளையொட்டி பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது.
இயக்கத்தின் அரசியல் செயலா் ஆ. ஜீவானந்தம் தனது உடலில் முன்னும், பின்னும் பதாகைகளை கட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் அரசு தீா்மானம் நிறைவேற்றியும், ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கடைவீதியில் பிரசாரம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...