எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூரில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சாவூா் ரயிலடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் ரயிலடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்கள் எழுப்பிய அனைத்திந்திய மாதா் சங்கத்தினா்.
Updated On :12 டிசம்பர் 2020, 7:24 pm

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சாவூா் ரயிலடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்களாக அதிகரித்து, கூலியை உயா்த்தி, நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு அரசு வங்கிகள் மூலம் நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும்.

நுண் நிதி நிறுவனக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். குடிமனைப் பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் தஞ்சாவூா் மாநகரச் செயலா் இ. வசந்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவா் ஆா். கலைச்செல்வி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எம். மாலதி, பெண்கள் உதவும் கரங்கள் செயலா் ஹாஜரா பீவி, ஜனசேவா பவன் செயலா் எஸ். சியாமளா, டி.எம்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் சாந்தி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.