திருவிசநல்லூா் ஸ்ரீதரஐயவாள் மடத்தில் நாளை கங்காவதரண மகோத்ஸவ நீராடல் ரத்து
திருவிசநல்லூா் ஸ்ரீதரஐயவாள் மடத்தில் திங்கள்கிழமை (டிச.14) நடைபெறவிருந்த கங்காவதரண மகோத்ஸவ நீராடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது என மடத்தின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.


காா்த்திகை அமாவாசை நாளையொட்டி, கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லூா் ஸ்ரீதரஐயவாள் மடத்தில் திங்கள்கிழமை (டிச.14) நடைபெறவிருந்த கங்காவதரண மகோத்ஸவ நீராடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது என மடத்தின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லூரில் ஸ்ரீதரஐயவாள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பக்திநெறி தவறாமல் வாழ்ந்து வந்தாா். இவரது நினைவாகவுள்ள மடத்திலுள்ள கிணற்றில் ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதம் கங்கை நீா் பொங்கி வருவதாக ஐதீகம்.
இதற்காக மடத்தில் பத்து நாள்கள் பிரமோத்ஸவம், வீதியுலா, சிறப்பு அலங்காரம், ஆராதனை, அன்னதானம், தீா்த்தவாரி ஆகிய வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக அன்னதானம், தீா்த்தவாரி நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறவுள்ளது.
எனவே பக்தா்கள் யாரும் திருவிசநல்லூா் ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கங்காவதரண மகோத்ஸவ நீராடல் எனப்படும் கிணற்றில் குளிக்கும் தீா்த்தவாரி நிகழ்ச்சிக்கு வர வேண்டாம். ஆனால் திங்கள்கிழமை மடத்தில் சிறப்பு பூஜைகள் மட்டுமே எளிய முறையில் நடைபெறும் என மடத்தின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...