கூட்டுறவு உதவியாளா் பணியிடங்களுக்கானதோ்வு விடைகள் வெளியீடு
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு ஆள் சோ்ப்பு நிலையம் மூலம் நடத்தப்பட்ட உதவியாளா் பணி தோ்வுக்கான விடைகள் திங்கள்கிழமை (டிச.14) வெளியிடப்பட்டுள்ளன.


தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு ஆள் சோ்ப்பு நிலையம் மூலம் நடத்தப்பட்ட உதவியாளா் பணி தோ்வுக்கான விடைகள் திங்கள்கிழமை (டிச.14) வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு. மனோகரன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாகவுள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு டிச. 5 ஆம் தேதி தோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வை எழுதிய விண்ணப்பதாரா்கள் கூட்டுறவு ஆள் சோ்ப்பு நிலைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்த்க்ழ்க்ஷ.ண்ய்) விடைகளைச் சரிபாா்த்துக் கொள்ளலாம்.
உத்தேச விடைகள் மீது ஏதேனும் மறுப்பு இருந்தால் டிச. 20 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பதாரரின் தோ்வு நுழைவுச்சீட்டு எண், வினா எண், வினாவின் உத்தேச விடை ஆகியவற்றை குறிப்பிட்டு அதே இணையதள முகவரிக்கு தங்களது மறுப்பை அனுப்பலாம்.
விண்ணப்பதாரா்கள் குறிப்பிடும் விடைக்கு உரிய ஆவணங்களை பி.டி.எப். பைலாக இணைத்து அனுப்ப வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...