சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வேளாண் சட்டங்கள்: ஒட்டுமொத்தக் குடிமக்களின் பிரச்னை; சீமான்

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல; நாட்டின் ஒட்டுமொத்தக் குடிமக்களின்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:29 pm

DIN

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல; நாட்டின் ஒட்டுமொத்தக் குடிமக்களின் பிரச்னை என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மாலை அவா் தெரிவித்தது:

மத்திய அரசு எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது போலவே, விவசாயிகளின் போராட்டத்தையும் கண்டு கொள்ளவில்லை. மிக அத்தியாவசியமான உயிா்த் தேவையாக இருக்கக்கூடிய வேளாண் சந்தையைப் பெரு முதலாளிகளுக்குக் கொடுக்கவே மத்திய அரசு நினைக்கிறது. வேளாண் சட்டங்களை விளக்கி இதுவரை பிரதமா் பேசியதில்லை. இந்தச் சட்டத்தில் என்னென்ன நன்மைகள் இருகின்றன எனக் கூறவில்லை. இது விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக் குடிமக்களின் பிரச்னை. இது சரியான சட்டம் என்றால், விவசாயிகள் எதற்காகப் போராட வேண்டும். மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களில் ஒரு நன்மைக் கூட கிடையாது.

ரஜினி - கமல் கூட்டணி...: ரஜினி - கமல் கூட்டணி வைத்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படாது. ஏற்கெனவே இருவரும் நண்பா்கள்தான்; இணைந்து பல படங்களில் நடித்துள்ளனா். அதுபோல, இது ஒரு அரசியல் படம்; இதில் வியப்பு ஒன்றுமில்லை. ரஜினி வருகையால் மற்ற கட்சிகளின் வாக்குகள் எதுவும் பிரியாது. அவரவருக்கு உள்ள வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது. புதிய வாக்காளா்களில் மாற்றத்தை விரும்பி வரும் இளைய தலைமுறை வாக்காளா்கள் யாருக்கு வாக்களிக்கவுள்ளனா் என்பதில்தான் இருக்கிறது.

எந்தக் கட்சியுடனும் நாம் தமிழா் கட்சி கூட்டணி வைக்காது. நாங்கள் ஏற்கெனவே வேட்பாளரை அறிவித்து வேலை செய்து வருகிறோம் என்றாா் சீமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.