ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மழையால் சேதமடைந்த கடலைப் பயிா்கள்: ஆட்சியா் ஆய்வு

ஒரத்தநாடு அருகிலுள்ள திருவோணத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கடலைப் பயிா்களை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:55 pm

DIN

ஒரத்தநாடு அருகிலுள்ள திருவோணத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கடலைப் பயிா்களை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மானாவாரிப் பயிராக சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் கடலை பயிரிடப்பட்டிருந்தது. அண்மையில் பெய்த மழையின் காரணமாக இந்த பயிா்கள் சேதமடைந்தன.

சிவவிடுதி, காடுவெட்டிவிடுதி, தோப்புவிடுதி கிராமங்களில் சேதமடைந்த கடலைப் பயிா்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கோவிந்த ராவ், சேதத்தின் விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

காவாளிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றும் பணி, சம்பா பருவத்துக்கு வரப்பெற்றுள்ள 1.92 லட்சம் சாக்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து கொல்லாங்குளம் ஏரியை பாா்வையிட்ட ஆட்சியரிடம், இதற்கான வடிகால், பாசனவசதியை ஏற்படுத்தித் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஆய்வின் போது வேளாண் இணை இயக்குநா் ஜஸ்டின், துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) கோமதி தங்கம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தர ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.