47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா்

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:47 pm

DIN

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் உழவா் பெருந்தலைவா் சி. நாராயணசாமி நாயுடுவின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் கோரிக்கை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி தெரிவித்தது:

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என தமிழக முதல்வா் உறுதியளித்துள்ளாா். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமானால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களால் தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விவசாயிகள் மீள வேண்டும் என்றால், அச்சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும்.

டெல்டாவில் ஏற்பட்ட புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையாக உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விரைவில் போராட்டத்தைத் தொடங்கவுள்ளோம் என்றாா் சின்னசாமி.

இம்மாநாட்டுக்கு தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் த. மணிமொழியன், பொதுச் செயலா் கே. சுந்தரம், துணைப் பொதுச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம், மாவட்ட துணைத் தலைவா் பா. தட்சிணாமூா்த்தி, சட்ட ஆலோசகா் ஆா். பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.