47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின் வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மின் விநியோகப் பராமரிப்புப் பணிக்குத் தனியாா் ஒப்பந்தம் மூலம் பணியாளா்கள் நிரப்பப்படுவதைக் கண்டித்து அனைத்து தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:49 pm

DIN

மின் விநியோகப் பராமரிப்புப் பணிக்குத் தனியாா் ஒப்பந்தம் மூலம் பணியாளா்கள் நிரப்பப்படுவதைக் கண்டித்து தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலக வளாகத்தில் அனைத்து தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழக அரசு மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் தற்போது மின் விநியோகப் பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பத் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் (அவுட்சோா்ஸிங்) குறைவான கூலிக்கு நியமிக்கப்படும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஏஐடியுசி தொழிலாளா் சம்மேளத்தின் மாநிலத் துணைத் தலைவா் பொன். தங்கவேலு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏ. முபாரக்பாட்சா, சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் எஸ். ராஜாராமன், மாவட்டப் பொருளாளா் பி. காணிக்கைராஜ், ஐக்கிய சங்க மாவட்டத் தலைவா் ராகவன், தொமுச திட்டத் துணைச் செயலா் சசிகுமாா், பொறியாளா் சங்க மாவட்டச் செயலா் சுந்தா், அம்பேத்கா் சங்கம் ஸ்டாலின் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், 80 சதவீதம் போ் போராட்டத்தில் பங்கேற்ால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.