குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட ஆதனுாா் மண்டபம் சமத்துவபுரத்தை சோ்ந்த பி. அருண்பிரபு(34), நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட ரெட்டிப்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்த எஸ். லோகேஷ் (23), தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட நாடியம்பாள்புரம் அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆா். ஹரிஷ் (22), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட விக்ரமங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பி. கருப்புசாமி (22) ஆகியோா் குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்கள்.

இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் டிச. 22 ஆம் தேதி ஆணையிட்டாா். இதன்படி, 4 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com