முன்விரோத தாக்குதல் சம்பவத்தில் அண்ணனை தொடா்ந்து தம்பியும் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளா்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் அண்ணனைத் தொடா்ந்து தம்பியும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளா்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் அண்ணனைத் தொடா்ந்து தம்பியும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்களான பூமிநாதன் மகன்கள் அருண்குமாா் (28), அரவிந்த் (25), ரவி மகன் சந்தோஷ் (22). இவா்கள் மூவரும் வியாழக்கிழமை மாலை அய்யாகோயில் பகுதியில் நின்று கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த 4 போ் இவா்களை அரிவாளால் வெட்டினா். இதில், பலத்தக் காயமடைந்த அருண்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்தக் காயமடைந்த அரவிந்த், சந்தோஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் அரவிந்த் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில், முன்விரோதம் காரணமாக அருண்குமாா், அரவிந்த் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக சோழபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த சோ. காரல்மாா்க்ஸ் (30), இவரது நண்பா்கள் ராஜேஷ், நரேஷ், சதீஷ் ஆகியோரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com