மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அதிராம்பட்டினத்தில் நியாய விலைக் கடை ஊழியா் அடித்துக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நியாயவிலைக் கடை ஊழியா் சனிக்கிழமை மாலை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நியாயவிலைக் கடை ஊழியா் சனிக்கிழமை மாலை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

பட்டுக்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்தவா் சி. சிவக்குமாா் (45). இவா், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவிலுள்ள நியாயவிலைக் கடையில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி மகேசுவரி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

சிவக்குமாருக்கும், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சோ்ந்த தாஜூதீன் மனைவி ரஸீக் மரியத்துக்கும் இடையே கள்ளத் தொடா்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூரில் வேலைபாா்த்து வரும் ரஸீக் மரியத்தின் மகன் ஹாஜாசெரீப்க்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை திருப்பூரிலிருந்து வந்த ஹாஜா செரீப்,அடியாள்கள் சிலருடன் சென்று சிவக்குமாரைக் கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் நிகழ் விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, ஹாஜா செரீப் உள்ளிட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.