தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து விவசாயிகள் வயலில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக் கொண்டு வரும் மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கும்பகோணம் அருகே வாளாபுரம் கிராமத்திலுள்ள வயலில்,

News image
Updated On :25 மே 2020, 8:33 am

DIN

மத்திய அரசுக் கொண்டு வரும் மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கும்பகோணம் அருகே வாளாபுரம் கிராமத்திலுள்ள வயலில், மின் மோட்டார் முன் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்குச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து விமல்நாதன் கூறுகையில், கார்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் வகையில் மத்திய அரசுக் கொண்டு வரும் மின் திருத்தச் சட்டம் விவசாயிகள், நெசவாளர்கள், சாதாரண சாமானிய மக்கள் நலனுக்கு எதிரானது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக வேளாண் உற்பத்தி மின் மானியமாக இந்தக் கட்டணமில்லா மின் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஐம்பதுக்கும் அதிகமான விலை மதிக்க முடியாத விவசாயிகளின் இன்னுயிர்களைப் பலி கொடுத்துப் பெற்ற உழவர்களின் உரிமை இது. இதன் மூலம், ஏழைகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் 2.25 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த இலவச மின்சாரத்துக்கு எதிராகவும், பெரும்பாலான பொதுத் துறைகளைத் தனியார் பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் மக்கள் விரோத, விவசாய விரோத செயலைக் கண்டித்தும் கருப்புக் கொடியை அடையாளமாக ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.