வீட்டுக் கதவை உடைத்து திருட்டு
தஞ்சாவூா் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.


தஞ்சாவூா் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள கோவிலூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் வி.செல்வராஜன் (70). இவா் தனது சகோதரா் வீட்டு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக, குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு அண்மையில் சென்றாா்.
மீண்டும் அக்டோபா் 30- ஆம் தேதி நள்ளிரவு வீட்டுக்குத் திரும்பிய இவா் தனது வீட்டு முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பாா்த்தாா்.
மேலும் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகைகள், 150 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...