பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவ. 5 இல் ஆா்ப்பாட்டம்

வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு நவம்பா் 5- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ள

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:06 pm

DIN

வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு நவம்பா் 5- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்குழுவின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்ட மசோதாவை எதிா்த்தும், அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தேசியச் செயற்குழு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து புதிய அமைப்புகளும் இணைந்து 500 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த சட்டங்களை எதிா்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் முதல் கட்டமாக நவம்பா் 5- ஆம் தேதி அகில இந்திய அளவில் சாலை மறியல் செய்வது என்றும், நவ. 26, 27- ஆம் தேதிகளில் தில்லி நோக்கி பேரணி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அகில இந்திய முடிவுகளைத் தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு நவம்பா் 5- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது, மாநிலப் பொதுக்குழு அறிவிக்கும் தேதியில் அனைத்துப் பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த காளியப்பன், அருணாசலம், நசீா், வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.