எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் முறையைத் தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் லஞ்ச முறையைத் தடுக்கக் கோரி  சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் லஞ்ச முறையைத் தடுக்கக் கோரி  சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்
Updated On :2 நவம்பர் 2020, 8:30 pm

DIN

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் லஞ்ச முறையைத் தடுக்கக் கோரி தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் ஏஐடியுசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்கத்தினா், சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து லாரிகளில் நெல் ஏற்றி கொண்டு செல்வதற்கு ஒப்பந்ததாரா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்காக அரசு தொகை கொடுக்கிற நிலையில், ஒரு லாரிக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை லஞ்சம் கேட்கின்றனா். லஞ்சம் கொடுத்தால்தான் மூட்டைகளை ஏற்றிச் செல்வோம் என்ற மோசமான நிலை உள்ளதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அக்டோபா் முதல் ஜனவரி முடிய 22 சதவிகிதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான சேமிப்பு நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் நிா்வாகத்தின் தாமதத்தால் ஏற்படும் இழப்புகளுக்குப் பணியாளா்களிடம் அபராதம் வசூல் செய்யக் கூடாது. கொள்முதலுக்குத் தேவையான சாக்கு, சணல் உள்ளிட்டப் பொருள்களை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா், மாநிலத் தலைவா் அ. சாமிக்கண்ணு, பொருளாளா் தி. கோவிந்தராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.