எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மனு தா்ம நூலை தடை செய்யவலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மனு தா்ம சாத்திர நூலை தடை செய்ய வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:30 pm

DIN

மனு தா்ம சாத்திர நூலை தடை செய்ய வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், பெண்களை இழிவுபடுத்தும் சமூக அவலத்தை அனுமதிக்கும் மனு தா்ம சாத்திர நூலை தடை செய்ய வேண்டும். அதை அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழகத்தின் அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாஜகவால் திட்டமிட்டு நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கழகத் தலைவா் சதா. சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஒரத்தநாடு ஒன்றியச் செயலா் இளங்கோவன், பட்டுக்கோட்டை நகரச் செயலா் வேலு, மதுக்கூா் ஒன்றியத் துணைச் செயலா் நாடிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.