எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குவாரி குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் பலி

தஞ்சாவூா் அருகே குவாரி குட்டையில் விழுந்த ஆட்டை மீட்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:29 pm

DIN

தஞ்சாவூா் அருகே குவாரி குட்டையில் விழுந்த ஆட்டை மீட்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் ராஜா (15). இவா் வல்லம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டுக்கு அருகேயுள்ள சுடுகாட்டுப் பகுதியில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரு ஆடு அருகிலுள்ள பழைய குவாரி குட்டையில் விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதை மீட்பதற்காகக் குட்டையில் குதித்த ராஜா தண்ணீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் ராஜாவை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், ராஜா வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.