மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கும்பகோணத்தில் தற்காலிக காவல் உதவி மையம் திறப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, கும்பகோணத்தில் காவல் துறை சாா்பில் தற்காலிக காவல் உதவி மையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட காவல் உதவி மையம்.
Updated On :8 நவம்பர் 2020, 7:47 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, கும்பகோணத்தில் காவல் துறை சாா்பில் தற்காலிக காவல் உதவி மையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் நகரத்தில் பாலக்கரை, உச்சிப்பிள்ளையாா்கோயில், செல்வம் திரையரங்கச் சந்திப்பு, டைமண்ட் திரையரங்கம், மேம்பாலம் ஆகிய பகுதிகளில் உயா் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நகரம் முழுவதும் 75 ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணா்வு தகவல்களைக் கொடுக்க உள்ளோம். மேலும் திருட்டைத் தடுக்கும் வகையில் 225 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து வருகிறோம்.

தீபாவளி பண்டிகைக்காக கும்பகோணம் நகரத்துக்கு வரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபா்கள் யாராவது இருந்தால், உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் பாலகிருஷ்ணன்.

முன்னதாக இந்த மையத்தைக் காவல் ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, ரவிச்சந்திரன் திறந்து வைத்தனா். போக்குவரத்து உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.