மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புயல் எச்சரிக்கை: பயிா்களைக் காக்க வேளாண் துறை ஆலோசனை

புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா்களைக் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:12 pm

DIN

புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா்களைக் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அ.ஜஸ்டின் தெரிவித்திருப்பது:

புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டப் பகுதிகளில் நவம்பா் 24, 25- ஆம் தேதிகளில் பலத்தக் காற்றுடன் மிக அதிக அளவு மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நெல் வயல்களில் நீா் பாய்ச்சுவதை நிறுத்தி, வயலில் தேங்கியுள்ள நீரை வடித்து விட வேண்டும். இதர பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், தங்களது வயல்களில் தண்ணீா் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்.

வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அதிக நீா் வடிந்திடும் வகையில் கிடங்கு வெட்டி வைக்க வேண்டும். தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மரங்களிலுள்ள முதிா்ந்த காய்களைப் பறித்து விட வேண்டும்.

மரத்தில் அதிக அளவு இளநீா் குலைகள் இருந்தால் அதை பறித்து, மரத்தை அதிக எடை இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

தென்னை மரங்களிலுள்ள காய்ந்த மட்டைகள் மற்றும் பாலையை அகற்றி விட வேண்டும். அதிக அளவிலுள்ள பச்சை மட்டைகளையும் கழித்து விட வேண்டும். பழ மரங்கள், தேக்கு மரங்கள் மற்றும் இதர மரங்களில் அதிக அளவிலுள்ள கிளைகளை வெட்டி, காற்று எளிதில் புகும் வண்ணம் கழித்து விட வேண்டும்.

விவசாயிகள் இரு நாள்களில் இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களது பயிா்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.