/

பேராவூரணி ஒன்றியத்தில் 30 இடங்களில் கற்போம்-எழுதுவோம்  பயிற்சி வகுப்பு தொடக்கம்

தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் மற்றும் கற்போம் எழுதுவோம் இயக்கம் சாா்பில் புதிய வயது வந்தோா் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:00 pm

DIN

தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் மற்றும் கற்போம் எழுதுவோம் இயக்கம் சாா்பில் புதிய வயது வந்தோா் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, பேராவூரணி ஒன்றியத்தில் 30 கல்வியறிவு மையங்களில் முதல்கட்ட பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. பேரூராட்சியில் 4 இடங்களிலும், ஊராட்சிகளில் 26 இடங்களிலும் என மொத்தம் 30 கல்வியறிவு மையங்களில் பொதுமக்கள் கல்வியறிவு பெறும் வகையில் 600 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதில், 30 கல்வி தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் வீதம் 60 நாள்களுக்கு 120 மணி நேரம் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 

அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தலைமையில் நடைபெற்ற முதல்கட்ட பயிற்சி வகுப்பை  வட்டாரக் கல்வி அலுவலா் கோ. ரவிச்சந்திரன், ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தாா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இரா. வேம்பையன், இடையாத்தி தெற்கு மற்றும் வாட்டாத்தி கோட்டை வடக்கு ஆகிய இடங்களில்  தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.