2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தஞ்சாவூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்கள் மாயம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) ஞாயிற்றுக்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைத் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :11 அக்டோபர் 2020, 3:53 pm

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) ஞாயிற்றுக்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைத் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டி தெற்கு பூக்கொல்லை ராஜகுரு நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நித்தீஷ் (19), மானோஜிபட்டி ராஜராஜன் நகரைச் சேர்ந்த செல்லதுரை மகன் ஹரிகரன் (18) ஆகிய இருவரும் தஞ்சாவூரிலுள்ள அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) படித்து வருகின்றனர். இருவரும் தனது நண்பர்களுடன் மானோஜிபட்டி பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றனர்.

ஆற்றில் 7 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீரோட்டம் வேகமாக இருந்ததால் ரித்தீஷ், ஹரிகரன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரையும் தேடினர். இரவு நேரமாகிவிட்டதால் இருவரையும் தேட முடியவில்லை. எனவே, திங்கள்கிழமை காலை மீண்டும் தேட உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.