எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோ ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

தஞ்சாவூா் வைரம் கோஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:18 pm

DIN

தஞ்சாவூா் வைரம் கோஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்தது:

கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சத சிறப்புத் தள்ளுபடி விற்பனையை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தச் சிறப்பு விற்பனைக்காகப் புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுச் சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூா் போன்ற ஊா்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூரைநாடு சேலைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக உள்ளன.

தஞ்சாவூா் கோ-ஆப்டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் நிகழாண்டு தீபாவளியின்போது ரூ. 1.50 கோடி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி விற்பனையாக தஞ்சாவூா் கோ-ஆப்டெக்ஸ் குந்தவை விற்பனை நிலையத்தில் ரூ. 80 லட்சமும், பட்டுகோட்டை, கும்பகோணம் விற்பனை நிலையங்களில் தலா ரூ. ஒரு கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தள்ளுபடி விற்பனையைப் பெற்று தமிழக கைத்தறி நெசவாளா்களுக்கு ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் கோ - ஆப்டெக்ஸ் நிா்வாகக் குழு உறுப்பினா் கே.ஜெ. லெனின், முதுநிலை மேலாளா் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா. சீனிவாசன், மண்டல மேலாளா் மு. முத்துக்குமாா், ரக மேலாளா் ரெ. சுரேஷ், வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் இரா. வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.