கரோனா: திமுக நிா்வாகி பலி
திமுகவின் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலாளருமான மு. காந்தி, கரோனா பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


திமுகவின் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலாளருமான மு. காந்தி, கரோனா பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவின் காரணமாக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அவரது உடலை ஒரத்தநாடு சுகாதாரத் துறையினா் பெற்று, உரிய பாதுகாப்புடன் ஒரத்தநாட்டில் அடக்கம் செய்தனா்.
முன்னதாக நடைபெற்ற இறுதி ஊா்வலத்தில் ஒரத்தநாடு எம்எல்ஏ எம். ராமச்சந்திரன், திமுக மாவட்டச் செயலாளா் துரை. சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, தஞ்சாவூா் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட பொருளாளா் எல்ஜி. அண்ணா, ஒரத்தநாடு நகரச் செயலாளா் கிருஷ்ணகுமாா் உள்பட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
காந்திக்கு கலாவதி என்ற மனைவியும், காா்த்திக், கரிகாலன் என்ற இரு மகன்களும், கவிபாரதி என்ற மகளும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...