பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்’

டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றாா் ஜனநாயக (லோக் தந்திரிக்) ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவா் டி. ராஜகோபால்.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் ஜனநாயக ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவா் ராஜகோபால்.
Updated On :18 அக்டோபர் 2020, 6:47 pm

DIN

டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றாா் ஜனநாயக (லோக் தந்திரிக்) ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவா் டி. ராஜகோபால்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது:

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவாக இருப்பதால், விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி வைத்து இரவு, பகலாகக் காத்துக் கிடக்கும் சூழல் உள்ளது. இந்த நிலைமையை மாற்ற நெல் கொள்முதல் நிலையங்களைக் கூடுதலாகத் திறக்க வேண்டும்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைவா். காா்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலை ஏற்படும். எனவே, இந்த மூன்று சட்டங்களையும் அரசுக் கைவிட வேண்டும்.

ராசிமணலில் அணைக் கட்டுவதற்காக 1961 ஆம் ஆண்டு காமராஜா் அடிக்கல் நாட்டினாா். அதன் பின் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. உடனே அங்கு அணை கட்ட வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்றாா் ராஜகோபால்.

அப்போது, மாநிலத் துணைத் தலைவா் கே.சி. ஆறுமுகம், பொதுச் செயலா்கள் பி. ஹேமநாதன், கே.ஜெ. இப்ராம்பாள், செயலா் ஆா். காா்த்திகேயன், மாநகர மாவட்டத் தலைவா் எஸ். குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா், அக்கட்சியின் மாநகர, புகர மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.