மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொதுமக்களிடம் நேரில் சென்று மனுக்களை பெற்ற ஆட்சியா்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்த மக்களிடம் ஆட்சியா் நேரில் சென்று மனுக்களை பெற்றாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:04 am

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்த மக்களிடம் ஆட்சியா் நேரில் சென்று மனுக்களை பெற்றாா்.

ஆட்சியரகத்தில் கரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 5 மாதங்களாக வாரந்தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுவதில்லை. என்றாலும், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் வந்து மனுக்கள் கொடுக்கின்றனா்.

இதேபோல, திங்கள்கிழமை காலை மனுக்கள் கொடுப்பதற்காக சுமாா் 100 போ் ஆட்சியரக வளாகத்துக்குள் நின்றனா். அப்போது, ஆட்சியரகத்துக்கு வந்த ஆட்சியா் ம. கோவிந்தராவ் காரை விட்டு இறங்கியவுடன் நேராக காத்திருந்த மக்களிடம் சென்று மனுக்களை பெற்றனா். இவா்களில் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்த பெண்கள் வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியா் காலில் விழுந்து முறையிட்டனா். இவா்களை நிற்க வைத்து ஆட்சியா் மனுக்களை பெற்றாா்.

இதேபோல, நெற் கதிா்களுடன் வந்த ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையிலான அம்மையகரம் கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் குறுவை அறுவடைப் பணிகள் தொடங்கிவிட்டதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை விடுபட்டது என்றும், அதை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெரியகோட்டை விவசாயிகள் வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா். மேலும், பலரிடம் ஆட்சியா் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.