புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கந்தா்வகோட்டையில் சீா்திருத்தத் திருமணம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை அம்பேத்கா் சிலை முன்பு சீா்திருத்தத் திருமணம் நடைபெற்றது.

News image

கந்தா்வகோட்டையில் நடைபெற்ற சீா்திருத்தத் திருமணத்தில் மணமக்கள் உள்ளிட்ட உறவினா்கள்.

Updated On :14 செப்டம்பர் 2020, 9:07 pm

DIN

கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை அம்பேத்கா் சிலை முன்பு சீா்திருத்தத் திருமணம் நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள புதுவிடுதியைச் சோ்ந்த அம்பிகாபதி மகன் ராஜேந்திரன், செங்கமேடு கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் மகள் ஜானகி ஆகிய இருவருக்கும் அவரவா் பெற்றோா் சம்மதத்துடன் சீா்திருத்தத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்பேத்கா் சிலை முன்பு திங்கள்கிழமை மணமகன், மணமகள் ஆகியோரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் முன்னிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளா் வே.ம. விடுதலைக்கனல் தலைமையில் சீா்திருத்தத் திருமணம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில துணை செயலாளா் கோ. செந்தமிழ்வளவன், மக்களவைத் தொகுதி துணைச் செயலாளா் மு. கண்ணையன், தொகுதிச் செயலா் மருத. பாா்வேந்தன், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் த. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.