எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூா் தற்காலிக எஸ்.பி.யாகமகேஸ்வரன் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ். மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:02 pm

DIN

தஞ்சாவூா் மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ். மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ். அலுவலா்களுக்கான பணியிடைப் பயிற்சி செப்டம்பா் 14ஆம் தேதி முதல் அக்டோபா் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பங்கேற்றுள்ளாா்.

இவா் பயிற்சி முடித்து வரும் வரை தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூடுதல் பொறுப்பை சென்னை துறைமுக அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டத்தின் தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ். மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் சில மாதங்களுக்கு முன்பு வரை தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.