அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக காற்று வீசியதால், மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
அதிராம்பட்டினம் பகுதியை உள்ளடக்கிய காந்தி நகா், கரையூா் தெரு, ஏரிப்புறக்கரை,
மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இப்பகுதி மீனவா்கள் தினமும் அதிகாலை தொடங்கி மாலை வரை படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து அதிவேக காற்று வீசியது. இதனால், வழக்கமாக மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள அனைத்துத் துறைமுகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. படகுகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வழக்கத்தை விட கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


