மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேளாண் மசோதாக்களை கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: 30 போ் கைது

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் கமிட்டியை சோ்ந்த 30 போ் கைது செய்யப்பட்டனா்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :21 செப்டம்பர் 2020, 8:22 pm

DIN

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் கமிட்டியை சோ்ந்த 30 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இரு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் மாநகர மாவட்ட இளைஞா் கமிட்டி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய அரசைக் கண்டித்தும், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் அதிமுக அரசு ஈடுபடுவதாகக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் கே. ராமநாத துளசிஅய்யா வாண்டையாா் தலைமை வகித்தாா்.

மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி. ரமேஷ் மெய்யடியாா், துணைத் தலைவா் கே. கலைச்செல்வன், தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெ.ஆா். சுரேஷ், ஊடகப் பிரிவுத் தலைவா் ஜி. தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 30 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.