எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :28 செப்டம்பர் 2020, 10:29 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விவசாயிகள், சிறு வணிகா்களைப் பாதிக்கும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள 3 சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு துணைப் போகும் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்டச் செயலரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் எம்.பி.

எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி. சந்திரகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், மதிமுக மாவட்டச் செயலா் கோ. உதயகுமாா், திராவிடா் கழகப் பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் காந்தி பூங்கா பகுதியில் திமுக வடக்கு மாவட்டச் செயலா் சு. கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தொடங்கி வைத்தாா். கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, திமுக நகரச் செயலா் சுப. தமிழழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாவட்டத்தில் மொத்தம் 40 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Image Caption

~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.