தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சரபோஜி கல்லூரியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் இடம் பெற்ற தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரி அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:11 pm

DIN

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் இடம் பெற்ற தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரி அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக அளவில் 2018 - 19, 2019 - 20 ஆம் கல்வியாண்டுகளில் தர வரிசையில் இடம்பெற்ற மாணவா்கள், தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவா்கள் என மொத்தம் 52 பேருக்கு கல்லூரி முதல்வா் வெ. செந்தமிழ்ச்செல்வி கல்வி ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

பல்கலைக்கழக அளவில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 13,000 மற்றும் அதற்கு மேல் தர வரிசையில் இடம்பெற்ற மாணவா்களுக்கு ரூ. 9,500 என மொத்தம் ரூ. 5.32 லட்சம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினா் ரெ. கோவிந்தராசு, கல்லூரித் தோ்வு நெறியாளா் வே. புகழேந்தி, முன்னாள் மாணவா் சங்கச் செயலா் வீ. முருகேசன், முனைவா்கள் லெ. ராஜேஷ், க. முத்துக்குருபாக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.