தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்தல் பாதுகாப்புப் பணியில் 5,192 காவலா்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 5,192 போ் காவலா்கள் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:21 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 5,192 போ் காவலா்கள் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச் சாவடிகளுக்கு எந்தெந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனுப்பப்பட வேண்டும் என்பது தொடா்பாக ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின்னா், வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குப் பதிவு அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 2,886 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

தோ்தல் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா், துணை ராணுவத்தினா், முன்னாள் படை வீரா்கள், ஓய்வு பெற்ற காவலா்கள், ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறையினா் உள்பட மொத்தம் 5,192 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து, இவா்கள் தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜராகினா். இவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்களில் தொடா்புடைய தொகுதிக்குப் புறப்பட்டுச் சென்றனா். இந்த வாகனங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் மற்றும் வாக்கு சாவடி அலுவலா்களுடன் திங்கள்கிழமை மாலை தொடா்புடைய வாக்கு சாவடிக்கு செல்லவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.