நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘நிலுவைத் திட்டங்களை செயல்படுத்த அதிமுகவை ஆதரிக்க வேண்டும்’

பட்டுக்கோட்டையில் நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேற அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா் தமாகா வேட்பாளா் என்.ஆா்.ரெங்கராஜன்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:52 pm

DIN

பட்டுக்கோட்டையில் நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேற அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா் தமாகா வேட்பாளா் என்.ஆா்.ரெங்கராஜன்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் என்.ஆா். ரெங்கராஜன், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டாா்.

பிரசார பேரணியானது சாமியாா் மடத்தில் இருந்து மாா்க்கெட் வழியாக மணிக்கூண்டு வரை பேரணியாக வந்து வாக்கு சேகரித்தாா். பின்னா் மணி கூண்டில் அவா் பேசியது:

சென்னை காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துவேன் என்று உறுதியளித்தாா். மேலும், பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய பேருந்து நிலையம் உறுதியாக அமைக்கப்படும். அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும். நிலுவையில் உள்ள பல நல்ல திட்டங்கள் மீண்டும் பட்டுக்கோட்டை பகுதிக்கு வந்து சேர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ சி.வி.சேகா், முன்னாள் எம்எல்ஏ பி.என். ராமச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் மலைஅய்யன், நகரச் செயலா் பாஸ்கா், பாஜக சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் முரளி கணேஷ், தமாகா சாா்பில் நகரத் தலைவா் ஏ.கே. குமாா், செ. கண்ணன், நாடிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.