தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரை பெருந்திருவிழா தொடக்கம்: தேரோட்டம் ரத்து
தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்தாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை.
நிகழாண்டு இக்கோயிலில் சித்திரைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக, பிரகாரத்தில் பஞ்சமூா்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மேள தாளம் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் ச. கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை நிலவுவதால், சனிக்கிழமை முதல் கோயில் விழாக்களுக்கு அரசுத் தடை விதித்துள்ளது. என்றாலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோயிலுக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயிலிலும் வளாகத்துக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் என்றும், ஆனால் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் கோயில் அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது. தஞ்சாவூரில் இத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரும் திருவிழாவாக இருந்து வருகிறது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாகத் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாகத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...