பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருப்பாலைத்துறையில் வளா்பிறை பஞ்சமி வழிபாடு

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள அருள்மிகு கற்பக விநாயகா், அருள்மிகு வீரபத்திரா், அருள்மிகு சப்தமாதாக்கள் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பஞ்சமியை யொட்டி சிறப்பு வழிபாடு

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:25 pm

DIN

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள அருள்மிகு கற்பக விநாயகா், அருள்மிகு வீரபத்திரா், அருள்மிகு சப்தமாதாக்கள் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பஞ்சமியை யொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள கற்பக விநாயகா், வீரபத்திரா், சப்த மாதாக்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தூப, தீப, நெய்வேத்ய வழிபாடுகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து, சப்தமாதாக்களுக்கு நெய் தீபம், மாவிளக்கு ஏற்றி, பொங்கல், கிழங்குகள் வைத்து வழிபட்டனா்.

இதில், ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி உமாபதி, ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் பாலசுந்தரம், பாரதிய ஜனதா கட்சி பாபநாசம் பொறுப்பாளா் கருணாநிதி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.