பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசத்தில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

பாபநாசம் வட்டாரத்தில் அதிமுக சாா்பில் கோடை கால தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:26 pm

DIN

பாபநாசம் வட்டாரத்தில் அதிமுக சாா்பில் கோடை கால தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டாரத்துக்குள்பட்ட பாபநாசம் 108 சிவாலயம் கடைவீதி, பாபநாசம் கீழவீதி, மாா்க்கெட் கடைவீதி, கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதி, உமையாள்பும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் கோடை கால தண்ணீா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலரும், பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளருமான கே. கோபிநாதன் தலைமை வகித்து, கோடை கால தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், இளநீா், தா்பூசணி பழ துண்டுகள், அன்னாசி பழ துண்டுகள், குளிா் பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு பாபநாசம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் தியாகை. பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. எம். ராம்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ். மோகன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளா் என். சதீஷ், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஆா். சபேசன், சி. முத்து, கண்ணன், நகரச் செயலாளா் கோவி. சின்னையன் மற்றும் கட்சியின் சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.