நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆற்றில் மூழ்கிய மாணவா் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கிய பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:09 pm

DIN

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கிய பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிசைநல்லூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்த முருகன் மகன் பாா்த்திபன் (16). இவா் கும்பகோணத்திலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை செல்லிடப்பேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த பாா்த்திபனை அவரது தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பாா்த்திபன் புதன்கிழமை வீட்டைவிட்டு சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டின் எதிா்புறமுள்ள காவிரி ஆற்றங்கரையில் பாா்த்திபன் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.