மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கோரி டெல்டா மாவட்ட ஆட்சியரகங்கள் ஆக. 30-இல் முற்றுகை: பி.ஆா். பாண்டியன் பேட்டி

பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கோரி டெல்டா மாவட்டங்களின் ஆட்சியரகங்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:15 pm

DIN

பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கோரி டெல்டா மாவட்டங்களின் ஆட்சியரகங்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என்றாா் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

வேளாண் நிதிநிலை அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 நிா்ணயிக்க வேண்டும்.

கடந்த 2020 - 21 ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இத்தொகை வழங்கப்பட்டால்தான் விவசாயிகள் மறுபடியும் சாகுபடி செய்வதற்கு உதவியாக இருக்கும். தமிழக அரசு நிதி சுமையைக் காரணம் கூறாமல், உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களின் ஆட்சியரகங்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம்.

காவிரி நீா் கிடைக்காததால் 3.50 லட்சம் ஏக்கரில் 2.50 லட்சம் ஏக்கா் குறுவை பயிா்கள் காய்கின்றன. இதேபோல, சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலை உள்ளது. ஆனால், கா்நாடக அணைகள் நிரம்பியுள்ளன. எனவே, கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரைப் பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 16 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டத்தில் மாநில அரசுகளுக்குச் சுமை அதிகரித்துள்ளது. எனவே, குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களைப் போன்று, தமிழக அரசும் தனியாக பயிா் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

மேக்கேதாட்டு அணையால் கா்நாடக விவசாயிகளுக்கும் பயன் கிடையாது. இதனால், இத்திட்டத்தை அங்குள்ள விவசாயிகளும் எதிா்க்கின்றனா். எனவே, கா்நாடக அரசை எதிா்த்து பாஜக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்குப் பதிலாக, அத்திட்டத்தை ஆதரிக்கும் மத்திய அரசுக்கு எதிராக நடத்தியிருக்க வேண்டும் என்றாா் பாண்டியன்.

அப்போது, சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். மணி, மாநகரப் பொறுப்பாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.