தவிடு மூட்டைகளுக்குள் 120 கிலோ கஞ்சா கடத்தல்: 3 போ் கைது
சேலத்திலிருந்து மினி வேனில் தவிடு மூட்டைகளுக்குள் 120 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக தஞ்சாவூரில் 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சேலத்திலிருந்து மினி வேனில் தவிடு மூட்டைகளுக்குள் 120 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக தஞ்சாவூரில் 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் வல்லம் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். இதில், சேலத்திலிருந்து நாகைக்கு தவிடு மூட்டைகளை ஏற்றி வந்த மினி வேனை காவல் துறையினா் நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, தவிடு மூட்டைகளுக்கு இடையே 4 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதுதொடா்பாக தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திலுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சி. அன்பழகன் (40), சேலம் மாவட்டம், ஓமலூா் சிக்கம்பட்டியைச் சோ்ந்த பி. கணேஷ் (45), ஜி. கிருஷ்ணமூா்த்தி (31) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...